• vilasalnews@gmail.com

சென்னையில் முக்கிய ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்

  • Share on

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது போலீசார் சுட்டுக்கொன்றனர்.


சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட பல்வேறு ரவுடிகள் என மொத்தம் இதுவரை 28 நபர்களை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை மாறி, மாறி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.


இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசிங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும், அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் சுவர் ஒட்டிகளை ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (செப் 22) காலை ஆந்திர மாநிலம், கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்த நிலையில், இன்று ( செப்.,23)  சென்னை  நீலாங்கரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது ரவுடி சீசிங் ராஜா போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

  • Share on

அதிகாரப்பூர்வமாகஅறிவித்தார் விஜய்.. தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு தேதியை!

15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!

  • Share on