• vilasalnews@gmail.com

என்னங்க இதெல்லாம்? நடிகர் விஜய்யை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!

  • Share on

மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் எனக் கூறி நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஏன் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.


தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் வரிசையில் நடிகர் விஜய்யும் சேர்ந்துள்ளார். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் முடிவெடுத்துள்ளார். அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. அதில், கட்சி கொடியையும், கட்சிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாகவும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்தது. விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். அதற்கான பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே, பண்டிகைகள் வந்தால் அதற்கு வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிடும் நடிகர் விஜய், அண்மையில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், இன்று மலையாளிகளின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த பதிவில், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இதனை மலையாள மொழியிலும் பதிவிட்டுள்ளார் அவர்.


இந்நிலையில், கேரளாவின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் நடிகர் விஜய், தமிழகத்தில் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? குறிப்பாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து வரவில்லை. இனிவரும் காலங்களிலாவது அனைத்துதரப்பு மக்களின் விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்திக்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.


மற்ற மதத்தினருக்கும், மற்ற மாநிலத்திற்கும் வாழ்த்து சொல்வதை பெருமையாக நினைக்கும் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதை அவமானமாக நினைக்கிறார் எனவும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஓணம் பண்டிகைக்கு விஜய் சொன்ன வாழ்த்தால் தற்போது சமூக வலைதளமே ரணகளமாகிக் கிடக்கிறது. நெட்டிசன்கள் கமென்டுகள் மூலம் நடிகர் விஜய்யை பொளந்து கட்டி வருகின்றனர்.

  • Share on

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

இது செப்டம்பரா? இல்ல மே மாதமா?

  • Share on