• vilasalnews@gmail.com

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

  • Share on

புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.


இந்த நிலையில், புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன் படி, பவுர்ணமி வருகிற 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது.


புரட்டாசி மாத பிறப்பன்று (17-ம் தேதி) பவுர்ணமி வருவதாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

மாநில அரசியலுக்கு வருகிறாரா கனிமொழி?

என்னங்க இதெல்லாம்? நடிகர் விஜய்யை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!

  • Share on