• vilasalnews@gmail.com

இந்த மாத பௌர்ணமியில் ஆ? திமுக தலைமையிலான தமிழக அரசில் ஏற்படுகிறதா?

  • Share on

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடாக அவ்வப்போது தங்களது ஆசைகளை வெளிப்படுத்தி வந்தனர். 

இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை'' என பதிலளித்தார்.

இந்த நிலையில் தான், ராமநாதபுரத்தில் நடந்த 'தமிழ்ப்புதல்வன்' திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன், மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, துணை முதல்வர் உதயநிதி என கூறிவிட்டு, அடுத்த நொடியே, சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகுதான் துணை முதல்வராவார். அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது எனக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


ஆகஸ்டு 19ல் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகிறார் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதையடுத்து, அவருக்கு பதவி கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால், நல்ல நாளாக பார்த்து பதவியேற்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, சுபமுகூர்த்த தினமான டிச.,14 ம் தேதி 2022ல் புதன்கிழமையாக பார்த்து, நல்ல நேரத்தில் (காலை 9:28) உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

எதிர்கட்சிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தும் மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தம் : புது வக்பு வாரிய சட்டம் சொல்வது என்ன?

நீங்கள் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களா ? வாழ்த்துக்கள்!

  • Share on