• vilasalnews@gmail.com

எதிர்கட்சிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தும் மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தம் : புது வக்பு வாரிய சட்டம் சொல்வது என்ன?

  • Share on

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.


அதாவது, இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு எதிர்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.


இந்த நிலையில், மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


பொதுவாக ஒரு சட்டத்தில் திருத்தங்களை செய்தால் ஒன்று அல்லது இரண்டு திருத்தங்களை செய்வார்கள். அதிகபட்சம் 10 திருத்தங்கள் கூட செய்யப்படுவது வழக்கம். ஆனால், 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்பு சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா முன்மொழிந்துள்ளது.


இந்த மசோதா சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் என்று பெயர் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வக்பு சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரங்களை கலெக்டருக்கு வழங்கியுள்ளது. இவர் இஸ்லாமியர் இல்லை என்றாலும் இனி வக்பு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை எடுக்க முடியும்.


வக்பு வாரியத்துக்கும் அரசுக்கும் அல்லது மக்களுக்கும் இடையே உள்ள சொத்து தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய சொத்து ஏதேனும் அரசாங்க சொத்தா இல்லையா என்பது குறித்து ஏதேனும் கேள்விகள் எழுந்தால், அந்த சொத்து அரசாங்கச் சொத்தா இல்லையா என்பதைத் தீர்மானித்துச் சமர்ப்பிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்படும். முன்பு இதில் வக்பு போர்டு அதிகாரம் வைத்து இருந்தது. அது நீக்கப்பட்டு உள்ளது.


ஷியாக்கள், சன்னிகள், போஹ்ராக்கள், அககானிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முஸ்லிம் சமூகங்களில் தனி தனியாக பிரதிநிதித்துவம் அளிக்க இந்த வரைவு சட்டம் வழங்குகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதும், இந்த அமைப்புகளில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பதை உறுதி செய்வதும் திருத்த மசோதாவின் நோக்கம் என்று அரசு கூறி உள்ளது. முஸ்லீம் சமூகத்தினரிடையே எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அரசு கூறி உள்ளது. அதன்படி இதில் இனி பெண்களும் இணையலாம்.


இவ்வாறு, 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்பு சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா முன்மொழிந்துள்ளது.

  • Share on

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது தெரியுமா? வெளியானது தகவல்!

இந்த மாத பௌர்ணமியில் ஆ? திமுக தலைமையிலான தமிழக அரசில் ஏற்படுகிறதா?

  • Share on