• vilasalnews@gmail.com

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி

  • Share on

 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பழங்குடியினர் மக்களுக்கான  சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.


கணக்கெடுப்பு பணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். பழங்குடியின மக்கள் இடையே கணக்கெடுப்பு பணியை தன்னார்வலர் சிந்துஜா மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு பழங்குடி  மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பானது தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.


இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசின் பழங்குடியின நலத்துறையும் ,சென்னை சமூக நீதி மற்றும் சமத்துவ மையமும் இணைந்து மேற்கொள்கிறார்கள். இந்த கணக்கெடுப்பிற்கான களப்பணியை தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பழங்குடியினரின் வளர்ச்சியில் அவர்களின் சமூக பொருளாதார நிலை, வாழ்விடம், வாழ்வியல் மற்றும் உடல்நலம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. தமிழ்நாட்டில் பழங்குடி மக்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்நிலையை பாதுகாப்பதற்கும், சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்த கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் சமூக பொருளாதார நிலையை கணக்கெடுத்து தனித்துவமான நலத்திட்டங்களையும், கொள்கைகளையும், துல்லியமாக அவர்களுக்கு கொண்டு சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தற்போது நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பானது தமிழ்நாடு பழங்குடியின மக்களிடையே ஏற்பட்டுள்ள மக்கள்தொகை உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வு நிலை பற்றிய விவரங்களை தொகுத்து வழங்க இருக்கிறது. 


கணக்கெடுப்பின் நோக்கங்களாக தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களின் தற்போதைய மக்கள் தொகை விவரங்களை சேகரித்தல், கல்வி மற்றும் வேலை நிலைமைகள் பற்றிய விவரங்களை சேகரித்தல், நில வகை பயன்பாடு மற்றும் நில ரப்பர் குத்தகை பற்றிய விவரங்களை சேகரித்தல், பழங்குடியினரின் நல்வாழ்வு மற்றும் சுகாதாரம் குறித்த விபரங்களை சேகரித்தல், பழங்குடியினர் நலத்திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரித்தல், பழங்குடியினருக்கான உள்கட்டமைப்பு பற்றிய விவரங்களை சேகரித்தல், பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டம் 2006 குறித்து விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு குறித்து விவரங்களை சேகரித்தல், இந்த கணக்கெடுப்பானது  கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட இருக்கிறது.

  • Share on

பத்திரிகை ஊடகங்கள், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்ட 50 சதவீதம் சலுகையை மீண்டும் வழங்க மக்களவையில் துரை வைகோ கோரிக்கை!

நாளை ( ஆக.,3 ) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும்... ஏன் தெரியுமா?

  • Share on