சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ளது திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வீடு. இங்கு அதிகாலை வந்த அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
முன்பு, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என பாலாஜி என்ற தொழிலதிபரை அணுகி ரூ.16 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.