• vilasalnews@gmail.com

தள்ளி நிற்க சொன்னேனா? திருச்செந்தூர் கோவிலில் என்ன நடந்துச்சு தெரியுமா.. விமர்சனத்திற்கு நடிகை ரோஜா கொடுத்த பதில்!

  • Share on

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை ரோஜாவுடன் தூய்மை பணியாளர்கள் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தூய்மை பணியாளர்களை நோக்கி அருகில் வர வேண்டாம் அங்கேயே நில்லுங்கள் என நடிகை ரோஜா செய்கை காட்டுவது போல வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இதற்கு நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். உலக பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அதிலும் முக்கிய விஷேச நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதும். பல மணி நேரம் காத்திருந்து தான் சாமி தரிசனமே செய்ய முடியும்.


அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனி வருஷாபிஷேக நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட பிரபல நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் வருகை தந்தார்.


அப்போது,ரோஜா சாமி தரிசனம் முடித்து வெளியே வரும்போது, அங்கே நின்றிருந்த மக்கள் அவரிடம் புகைப்படங்கள் எடுக்க ஆர்வம் காட்டினர். அதில், அங்கு இருந்த தூய்மை பணியாளர்களும் ரோஜாவுடன் செல்பி எடுக்க ஓடி வந்தனர். அவர்களுடன் ரோஜா செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். எனினும், செல்பி புகைப்படம் எடுக்கும் போது நடிகை ரோஜா, தூய்மை பணியாளர்களை நோக்கி அருகில் வர வேண்டாம் அங்கேயே நில்லுங்கள் என செய்கை காட்டுவது போல வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது.


தூய்மை பணியாளர்கள் என்ன தீண்ட தகாதவர்களா? அவர்களால் தான் நமது சுற்றுப்புறமே தூய்மையாக உள்ளது என்கிற வகையில் நியாயம் என்று நேட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். நடிகை ரோஜாவின் இந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. 


இந்த நிலையில், நடிகை ரோஜா அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்போது திருச்செந்தூர் கோவிலில் தரைதளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாருங்கள் என்று தான் கூறினேன். மெதுவாக வாங்க என்பதற்கு தான் நான் அப்படி கை சைகை காட்டினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது, தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்து விட்டனர்.


தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி என்பது மிகவும் உயர்வானது. அவர்கள் மீது எனக்கு தனி மரியாதை எப்போதும் உண்டு. அப்படி இருக்கும் போது அவர்களை நான் எப்படி தொட வேண்டாம் என சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு சிலர் அவதூறு பரப்புகின்றனர். இப்படி அவதூறு பரப்புவது எனக்கு வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Share on

திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!

சோசியல் மீடியாவில் சலசலக்கும் பிரியாணி மேன் - இர்பான் - டெய்லர் அக்கா - ஏடூடி சண்டை.. என்னதான் நடக்கிறது அங்கே? முழு பின்னணி

  • Share on