நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்க போகிறீர்கள் முதல்வருக்கு சட்டசபையில் பாராட்டு மழை
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் முசிறி தொகுதி அதிமுக உறுப்பினர் சந்திரன் பேசுகையில், வரலாற்றில் கரிகாலச்சோழன் குறித்து சபாநாயகர், நான், என் பையன் முதல் கொண்டு படித்துள்ளோம்.
ஒரு கல்லணை கட்டிய கரிகால சோழன் குறித்து பாடமாக பள்ளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 14 தடுப்பணைகளை கட்டித் தந்த வாழும் கரிகால சோழன் முதல்வர் பழனிசாமியை தமிழக வரலாற்று புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர்களும், முதல்வர் பழனிச்சாமிக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.
நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்க போகிறீர்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்று அமைச்சர் சரோஜாவும், மாதம் மும்மாரி பொழியும் ராசிக்கு சொந்தக்காரர் என்று அமைச்சர் தங்கமணியும் முதல்வருக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.