• vilasalnews@gmail.com

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை...சென்னையில் அதிகாலையில் நடந்த என்கவுண்டர்!

  • Share on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் சென்னை மாதவரத்தில் தப்பிக்க முயன்றபோது என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடியான கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆம்ஸ்ட்ராங் தரப்பினரும் ஒரு புறம் கோரிக்கை விடுத்து வருன்றனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கு கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் கஸ்டடியில் எடுத்த 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்திற்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், ரவுடி திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியதை அடுத்து அங்கு அழைத்துச் சென்றபோது, திடீரென ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகவும், அதனால் போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது.

  • Share on

என் உயிருக்கு ஆபத்து...என்னை கொல்ல சதி - சாட்டை துரைமுருகன் பகீர்!

திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!

  • Share on