புதுக்கோட்டையில் ரவுடி துரை என்பவர் போலீசாரை தாக்க முயன்ற போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்தார். ரவுடி துரை மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி துரைசாமி என்கிற எம்ஜிஆர் நகர் துரை. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, உள்ளிட்ட சுமார் 70 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் ரவுடி துரை புதுக்கோட்டை வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரவுடி துரையை போலீஸார் பிடிக்க சென்றனர். அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்த போது போலீஸாரை தாக்கினார். இதையடுத்து தற்காப்புக்காக அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த ரவுடி மீது திருச்சி மட்டுமில்லை தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிட தக்கது.