சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என அண்ணாமலை கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் அவரது வீட்டை முற்றுகையிட திட்டமிட்ட நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகையை அண்ணாமலை ரவுடி என கூறியதால் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் அனுமதி கேட்டு போலீஸில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் வீட்டை முற்றுகையிட அனுமதி கேட்ட நிலையில் போலீஸார் மறுத்ததால் தடையை மீறி போராட்டம் நடத்த காங்கிரஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.