கொரோனா பாதித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், குணமடைந்து வீடு திரும்பினார்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நுரையீரல் பாதிப்பை சரிசெய்யவும், ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவ உலகின் அதிசயமாக, காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது பூரண குணம் அடைந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார்