• vilasalnews@gmail.com

ஜூலை 10 பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

  • Share on

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்னிட்டு, ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில், தமிழ்நாடு அடுத்த தேர்தலுக்கு தயாரானது.

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், சுயேட்சைகள் என பலரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.

திமுக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்கின்றனர். பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்கின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து தொகுதி முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • Share on

திருச்சி : பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

தமிழகத்தின் தலைநகரிலேயே பிரபல அரசியல் கட்சி மாநில தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

  • Share on