• vilasalnews@gmail.com

குடிமகன்களுக்கு ஷாக் செய்தி... 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடை மூடல்!

  • Share on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 35 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே தான் மும்முனை போட்டி நிகழ்கிறது. பிரதான கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே, ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 8.7.2024 அன்று காலை 10 மணி முதல் 10.7.2024 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் 13.7.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

  • Share on

பாதிரியார் செய்த அட்டூழியம்.. பாய்ந்தது போக்சோ!

திருச்சி : பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

  • Share on