காஞ்சிபுரம் பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், காஞ்சிபுரம் மகளிர் போலீசார் பாதிரியார் தேவ இரக்கத்தை கைது செய்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் சிறுமி படித்து வருகிறார். சிறுமியின் தாய் உயிரிழந்து விட்டதால் தனது அக்கா மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமியின் அக்கா அப்பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனால், சிறுமியும் அடிக்கடி சர்ச்சிற்கு சென்று வருவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி சர்ச்சில் ஒருவாரம் காலம் தங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த சர்ச்சில் பாதிரியாராக இருக்கும் தேவ இரக்கம், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளர். மேலும் சிறுமி என்றும் பாராமல், பாலியல் தொல்லையும் கொடுத்து இருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சல் போட்டு இருக்கிறார்.
மேலும், உடனடியாக தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். சிறுமிக்கு சர்ச்சில் வைத்து பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக பொதுமக்கள் சிலர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்து இருக்கிறார்கள்.
இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு இந்த புகார் மனு சென்றுள்ளது. அதன் அடிப்படையில் அவர் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் உண்மை தெரியவந்ததையடுத்து, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி பிரியா புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பாதிரியார் தேவ இரக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்னர். காஞ்சிபுரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.