• vilasalnews@gmail.com

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. அரசு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் - தவெக தலைவர் விஜய் காட்டம்!

  • Share on

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில், அரசு நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

900 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்ய்பபட்டுள்ளது. போதைக்காக மெத்தனால் அதிகளவு கலக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த அவலத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டர் பதில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

  • Share on

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை : 28 வயது இளம்பெண் போக்சோவில் கைது!

கள்ளக்குறிச்சியில் என்னை தாக்க முயன்றது அவர் தான் | சாட்டை துரைமுருகன் விளக்கம்!

  • Share on