• vilasalnews@gmail.com

ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தற்கொலை முயற்சி ஏன்?

  • Share on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை திடீரென தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குளம் தொகுதியில் திரும்பவும் எம்எல்ஏவானார். தற்போதும் திமுகவில் தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர்.

அண்மையில் கட்சியில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் விவகாரத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் எம்எல்ஏ பூங்கோதை. குறிப்பாக கடையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதை அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதன் பின் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே பூங்கோதை தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூக்க மாத்திரை மூலம் தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏ பூங்கோதை நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திடீரென கட்சியினரால் மன அழுத்தத்துக்குள்ளாகி பூங்கோதை எம்எல்ஏ பாதிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரம் மட்டுமில்லாமல், ஆலங்குளம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் தலைவர் ராஜினாமா!

காதல் நாடகமாடி பாலியல் தொல்லை தந்த பொறியியல் பட்டதாரி கைது!

  • Share on