• vilasalnews@gmail.com

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் | கத்தியுடன் வந்த முதியவரால் பரபரப்பு!

  • Share on

இன்று நாடு முழுவதும் காலை 8 மணியில் இருந்து மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் முதியவர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் 18 வது பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 8 மணியிலிருந்து வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வயது முதிர்ந்த ஒருவர் உரையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்திருந்தார்.

அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணியில் இருந்து தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதியவர் ஒருவர் கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை : சதுரகிரி மலை கோவில் செல்ல தடை!

தமிழகத்தில் 40/40 இந்தியா கூட்டணி முன்னிலை | அதிரடி காட்டும் திமுக!

  • Share on