• vilasalnews@gmail.com

அதிமுகவை விட பெரிய கட்சியாகும் பாஜக! எக்சிட் போல் முடிவில் வந்த கணிப்பு!

  • Share on

2024 லோக்சபா தேர்தல் இன்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்  ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0 -2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தமிழகத்தில் மலர்கிறது தாமரை? பாஜக கூட்டணிக்கு 3 சீட்கள்!

தமிழகத்தில் வெல்லப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முழு விபரம்!

  • Share on