காரை ஓட்டியப்படியே செல்போனில் பேசியதாகவும், தகாத வார்த்தைகளில் பேசி வீடியோக்கள் வெளியிடுவதாகவும் கூறி விஜே சித்துவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, அவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது.
அதிகவேகமாக பைக் ஓட்டினார் என்ற வழக்கில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கைதான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கார் ஓட்டிய வழக்கில் நேற்று கைதாகினர். அவரின் பைக் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டியும் அவர் கைதாகி, அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இது தொடர்பாக பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவர துவங்கிய நிலையில், தற்போது மற்றுமொரு பிரபல யூடியூபரான விஜே சித்து மீது கவனம் திரும்பியுள்ளது
Vj Siddhu என்ற யூடியூப் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சித்து. அதே போல அவரின் மொட்டை மாடி என்ற வீடியோக்களும் முக்கிய பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியாகவே மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் விஜே சித்து சிக்க முக்கிய காரணம், vlog வீடியோ ஒன்றில் சித்து, போன் பேசி கொண்டே கார் ஓட்டுகிறார்.
டிடிஎஃப் வாசனும் இதே போன்ற வழக்கில் தான் கைதுசெய்யப்பட்டார் என்பதால், தற்போது சிலர் சமூகவலைத்தளங்களில் சட்டம் அனைவரும் சமம் - அப்படி என்பதால் இவரும் கைது செய்யப்படவேண்டும் அல்லவா? என கேள்விகளை எழுப்பி விட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் உயர்நீதி மன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக இருக்கும் செரின் என்ற பெண் ஒருவர், காரை ஓட்டியப்படியே செல்போனில் பேசியதாகவும், தகாத வார்த்தைகளில் பேசி வீடியோக்கள் வெளியிடுவதாகவும் கூறி விஜே சித்துவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, அவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.