• vilasalnews@gmail.com

4 மணி நேரம்..! நூற்றுக்கணக்கான வாகனங்கள் புடைசூழ தீபக் ராஜா உடல் ஊர்வலம்! நெல்லையே திணறிப் போச்சே!

  • Share on

நெல்லையில் கடந்த வாரம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜாவின் உடலை ஏழு நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதை அடுத்து 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கார்கள் புடை சூழ தீபக் ராஜாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(30). இவர் கடந்த திங்கட்கிழமை தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்டது பிரபல ரவுடியான லெஃப்ட் முருகன் மற்றும் நவீன் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதற்கிடையே அவரது உடல் உறவினர்களால் பெற்றுக் கொள்ளப்படாமலேயே 7 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து தீபக் ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்கு அடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தீபக் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்ந்து நெல்லையிலிருந்து வாகைகுளத்திற்கு அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல உறவினர்கள் திட்டமிட்டனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நான்கு மணி நேரமாக கடந்த அவர்கள் அதற்கு பிறகு அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.

பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கூடி நிற்க, தீபக் ராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக தீபக் ராஜா கொலை விவகாரத்தில் பரபரப்பு நீடித்த நிலையில், நேற்று அவரது உடல் சேகுவாரா(Che Guevara), ஃபிடல் காஸ்ட்ரோ(Fidel Castro) போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்களும் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில், பல்வேறு கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக நெல்லையில் எதுவும் பிரச்சினை ஏற்படலாம் என்பதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சுமார் 2000 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபக் ராஜாவின் ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 500 போலீசார் உடன் சென்றனர்.

  • Share on

தென் தமிழகத்தில் கூலி படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.. கொதிக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

மே மாதம் ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பு கிடைக்கலையா? கவலை வேண்டாம்... வாங்கிக்கலாமே!

  • Share on