கமுதி அருகே பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருக்கோயிலில் தெய்வீக திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின் சார்பாக வைகாசி விசாக பௌர்ணமி திருநாளை முன்னிட்டு சிலம்பாட்டம், ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது.
தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பசும்பொன்னில் ஆன்மீகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நடைபெற்று வருகிறது. அதேபோல வைகாசி விசாக பௌர்ணமி விழாவை முன்னிட்டு சிலம்பாட்டம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அவர்கள் தலைமை வகித்தார், கமுதி பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ந.முக்கூரான், செயலாளர் வழக்கறிஞர் சு.முத்துராமலிங்கம், பொருளாளர் வே.கோட்டை இளங்கோவன், பசும்பொன் ஊராட்சி தலைவர் கே.டி.இராமகிருஷ்ண ன், கமுதி தாலுகா மறவர் சங்க செயலாளர் ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் வரலாற்று ஆய்வாளர் வீ.எஸ். நவமணி, அவசியம் ஸ்ரீ இராமுஜி, தேவர் பொக்கிஷம் நூலின் ஆசிரியர் க.பூபதிராஜா, பி.கே.மூக்கையாத்தேவர் அரசு இலவச போட்டித்தேர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்கள். நிகழ்ச்சியை உதவி பேராசிரியர் ஆதிமூலம் தொகுத்து வழங்கினார். சாயல்குடி நாகுபாண்டி சேர்வைக்காரர் சிலம்பு குழுவினர் மாபெரும் சிலம்பாட்டம் நடைபெற்றது. 100 க்கு மேற்பட்ட சிலம்பாட்டம் வீரர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி சிறப்பித்தனர். கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவசியம் ஸ்ரீ இராமுஜிக்கு "ஆன்மீகச் சுடர் விருது" பசும்பொன் இரத்த தான அறக்கட்டளையின் தலைவர் மதுரை மூ.கண்ணன், கே.சி.செந்தில்குமார், கேரளா ச.நாராயணத்தேவர் ஆகியோருக்கு "இரத்தத் திலகம் விருது" தேவர் மலர் அறக்கட்டளை நிறுவனர் பசும்பொன் பொ.பாலமுருகனுக்கு " அமுதசுரபி விருது" சாயல்குடி நாகுபாண்டி சேர்வைக்காரர் சிலம்பு பயிற்சி ஆசிரியர் ந.அம்சவர்தனுக்கு " வீரக்கலை வேந்தர் விருது" சிவகாசி பசும்பொன் சித்தர் அறக்கட்டளையின் தலைவர் மா.முத்துகுமாருக்கு "சித்தர் சிந்தனைச்சுடர் விருது " ஆகியவை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின் சார்பாக வழங்கி சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் வீ.எஸ். நவமணி பேசுகையில், "பசும்பொன் தேவர் தேசம் எனது உடல் , தெய்வீகம் எனது உயிர் என தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தவர், மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியபோது அதற்கு பக்க பலமாகவும் இருந்தவர்தான் பசும்பொன் தேவர் அவர்கள். இந்திய அரசியலில் அனைத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மாபெரும் தலைவர் தேவர் எனவும், இதுவரை 90 புத்தகம் தேவர் பற்றி வெளிவந்துள்ளது என்றார். அவரின் வாழ்க்கை வரலாறுகளையும் இன்றைய இளைஞர்கள் அனைவரும் புத்தகங்களை தேடி படிக்க வேண்டும் எனவும், சமூக வலைதளத்தில் தேவரின் வரலாறு தெரியாமல் சவுக்கு சங்கர் போன்ற நபர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார். தேவரின் புண்ணிய பூமியான திருத்தலத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுக்களும் தொடர்ந்து நடத்தி சிறப்பிக்க வேண்டும். தேவரின் நல்ல கருத்துக்களை, தேசிய சிந்தனைகள், அவரின் கொள்கைகளை, அனைவரும் தெரியும் வகையில் மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், தேவர் கல்லூரி உதவி பேராசன வாகை பாண்டியன், தேவர் மீடியா அறக்கட்டளையின் தலைவர் ஆலடிபட்டி மகேஸ்வரன்,பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் வெங்கடாசலம்,முருகன் முக்குலத்தோர் புலிப்படை பொன்முத்துராமலிங்கத்,பூமிநாதத்தேவர், கமுதி தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் குடிக்கினியான் முத்துகிருஷ்ணன், முதல்நாடு நல்லுசாமி, சண்முக மூர்த்தி, ஜாஹிர் உசேன்,சமூக ஆர்வலர்களும், ஆன்மீக அன்பர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகி முத்துராமன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர். வழக்கறிஞர் மு. ஆறுமுகம் செய்திருந்தார். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.