நாமக்கல் தி ஜெய் பீம் அகாடமி சார்பில் புத்த பூர்ணிமா விழா மற்றும் சாக்கிய ரத்னா விருதுகள் வழங்கும் விழா திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் அருந்ததியர் சமுதாய மண்டபத்தில், இந்திய கணசங்கம் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
விழாவில், அகில இந்திய சாக்கிய ராசகுல தம்ம போதினம் சார்பில் புத்தரின் திருவுருவப்படத்திற்கு மலர் வந்தனம் செலுத்தி, புனித நீர் தெளித்து புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற 2024 சாக்கிய ரத்னா விருது வழங்கும் விழாவில், டெல்லி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஜெயவீரதேவன், குளித்தலை அறம் நல்வாழ்வு மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் வீரா.கோபி, கோவை இளங்கோ கணேசன், கோவை பழனி முருகன், வேலூர் தம்மாதிபதி கலியபெருமாள், சமூகவாதி திருச்சி அசோகன், அருந்ததியர் ஊடக மையத்தின் இயக்குனர் அன்னக்கொடி, வேப்பந்தட்டை திராவிட கழக ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, குளித்தலை ஆசிரியர் வி.பி.ராஜன், ஈரோடு தம்மாதிபதி என்.கே.கே துரைசாமி, ஊடகவியலாளர் கரூர் கண்ணன் , ஓமலூர் மாதையன் இளங்கோ, கல்வியாளர் தூத்துக்குடி கருப்புசாமி, நாமக்கல் மாவட்ட சாக்கிய இராசகுல சிராமணர் சங்க தலைவர் தாசி உள்ளிட்ட 30 பேருக்கு சாக்கிய ரத்னா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில், இந்திய கணசங்கம் கட்சியின் மாநில அவைத்தலைவர் பெருமாள்ராஜ், பொதுச் செயலாளர் பெருமாள் சண்முகசுந்தரம், அகில இந்திய சாக்கியராசகுல சிராமண சங்கத்தின் தலைவர் குன்னன் பெருமாள், அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மை சமூக பணியாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, திருச்சி தமாதிபதி திருமலை, இந்திய கணசங்க கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கோவை நாகராஜ், அகில இந்திய மகளிர் கணசங்க மேற்கு மண்டல தலைவர் வளர்மதி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.