• vilasalnews@gmail.com

மோகனூர் பேரூராட்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் ஆட்சியர் உமா ஆய்வு!

  • Share on

போட்டி தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருவதை நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மற்றும் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (23.5.2024) மாவட்ட ஆட்சியர் உமா, வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் பேரூராட்சியில் போட்டி தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு, நூலகத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு அரசுத்தேர்வுகளில் வெற்றி பெற மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து நூலகத்தை முறையாக பராமரிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். 

மேலும், மோகனூர் பேரூராட்சியில் சுகாதார நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மரூர்பட்டியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

  • Share on

சங்கர கந்தசாமி கண்டரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி - ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது!

  • Share on