நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டர் அறநிலையம் நிறுவனர் சங்கர கந்தசாமி கண்டரின் 144 வது பிறந்தநாள் விழா, வேலூர் கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மக்கள் கல்வி நிறுவன சேர்மன் மஹிந்தர் மணி தலைமையில், கபிலர்மலையில் உள்ள SKY பவுண்டேஷன் முதியோர் இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் SKY பவுண்டேஷன் நிறுவனர் முருகானந்தராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.