சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரளா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு தற்பொழுது தொடங்கியுள்ளது.
இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வரத்து குறைந்து, அமராவதி அணையின் பாசன விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே அமராவதி அணை பாசன விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு, அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு தொடங்கியுள்ள பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.