• vilasalnews@gmail.com

நாமக்கல் உழவர் சந்தைக்குள் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர் கேடு அபாயம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட விவசாய அணி கோரிக்கை!

  • Share on

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, மழை நீர் மற்றும் கழிவு நீரானது நாமக்கல் உழவர் சந்தைக்குள் புகுந்து சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

நகராட்சி நிர்வாகத்திடமும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ பல முறை புகார் அளித்தும் யாரும் இதுவரை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தையின்  ஒரு பகுதியை எடுத்து சாலையாக மாற்றினார்கள். அப்பொழுது முறையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்காமல் விட்டதே இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு காரணம். அதன் பின் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் விவசாயிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் புகார் கொடுத்தும் பலரும் வந்து நேரில் ஆய்வு செய்தும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. 

மேலும், தினமும் பல நூறு விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை உழவர் சந்தையில் கொண்டு வந்து தங்களது விவசாய பொருட்களை நேரடியாக இங்கு விற்பனை செய்கின்றனர். இதனை நாமக்கல் நகரப் பொதுமக்கள் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொது மக்களும் வந்து வாங்கி செல்கின்றனர். 

இத்தகைய சூழலில், உழவர் சந்தைக்குள் கழிவு நீர் தேங்கி சுகாதாரமற்ற நிலை காணப்படும் நிலையில், உழவர் சந்தைக்குள் யாரும் வந்து செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த நிலையை உடனடியாக மாற்றி உழவர் சந்தைக்குள் கழிவு நீர் தேங்காத வகையில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உமா போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை - உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!

  • Share on