• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா : சிலைக்கு திமுக மாலை அணிவித்து மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் அம்பேத்கரின்  பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின்  பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, அவைத் தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி கோட்டுராஜா, வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!

தமிழகத்தில் சறுக்கும் திமுக கூட்டணி! அதிமுகவை விட அதிக இடங்களை அள்ளும் பாஜக.. NEWS X கருத்து கணிப்பு!

  • Share on