மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மதிமுக சார்பில் மூன்று முறை எம்பியாக இருந்த கணேசமூர்த்தி இந்த முறையும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், ஈரோடு தொகுதியை இந்த முறை திமுக எடுத்துக்கொண்டது. அதற்கு பதிலாக திருச்சியை ஒதுக்கியது. திருச்சியில், வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதனால் அப்செட் ஆன கணேசமூர்த்தி கடந்த 24ம் தேதியன்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இதனால் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூா்த்தி வியாழன் அதிகாலை ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு மதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.