வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளன. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலுக்கான தேதிகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அமமுகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேநேரத்தில், தமாகா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில், இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும். தான் வேட்பாளர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.