பாஜக வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்றும் 39 தொகுதிகளிலும் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
39 தொகுதிகளிலும் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் பாஜக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.
4 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று மாலை முதல் எப்போது வேண்டும் என்றாலும் எதிர்பார்ப்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.