• vilasalnews@gmail.com

திமுக vs அதிமுக...நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள் யார் யார்?

  • Share on

2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவும் - அதிமுகவும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.

நாட்டில் 7 கட்டமாக நடைபெறும் லோக்சபா தேர்தலில், முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 19 ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து அதிமுகவும் திமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதிமுகவில் முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதேபோல், திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

இதன்படி, தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. 

வட சென்னை:

வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். அதிமுகவில் ராயபுரம் மனோ களத்தில் உள்ளார்.

தென் சென்னை:

தென் சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுகவில் ஜெயவர்த்தனும் நேருக்கு நேர் போட்டியிடுகிறார்கள்.

காஞ்சிபுரம்(தனி):

காஞ்சிபுரம்(தனி) தொகுதியில் திமுக சார்பில் ஜி செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார்.

தேனி:

தேனியில் திமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தேனி தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

அரக்கோணம்:

அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், அதிமுகவில் ஏ.எல். விஜயனும் நேருக்கு நேர் களம் காண்கின்றனர்.

ஈரோடு:

ஈரோடு தொகுதியில் திமுகவில் பிரகாஷும் அதிமுகவில் ஆற்றல் அசோக்குமாரும் நேருக்கு நேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

சேலம்:

சேலம் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் செல்வ கணபதியும் அதிமுகவில் விக்னேஷும் போட்டியிடுகிறார்கள்.

ஆரணி:

ஆரணி தொகுதியில் திமுகவில் தரணி வேந்தனும் அதிமுகவில் கஜேந்திரனும் நேருக்கு நேர் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக தற்போது வரை 16 வேட்பாளர்களின் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது. இன்னும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும், யார்? யார்? போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரம் நாளை தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதனால் திமுகவுடன் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் இன்னும் அதிகரிக்கும்.

  • Share on

தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி

அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது : எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக வெளியிட்டார்!

  • Share on