திமுக கூட்டணியில் திமுகவோடு சேர்த்து மொத்தம் 8 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சீட் இன்றி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள கட்சிகளுக்கு ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்து, அவர்களுக்கு தனது இதயத்தில் இடம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி முதல் அணியாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, தொகுதி பங்கீட்டையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் அவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட் விவரங்கள், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:
விசிக போட்டியிடும் தொகுதிகள்
சிதம்பரம் (தனி) - திருமாவளவன்
விழுப்புரம் (தனி) - ரவிக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
நாகப்பட்டினம்
திருப்பூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
மதுரை - சு.வெங்கடேசன்
திண்டுக்கல் - சச்சிதானந்தம்
மதிமுக போட்டியிடும் தொகுதி:
திருச்சி - துரை வைகோ
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ராமநாதபுரம் - நவாஸ் கனி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
நாமக்கல் - சூரியமூர்த்தி (உதயசூரியன் சின்னம்)
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்:
தென் சென்னை
மத்திய சென்னை
வட சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
வேலூர்
அரக்கோணம்
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
தருமபுரி
கோவை
பொள்ளாச்சி
சேலம்
ஈரோடு
நீலகிரி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
தேனி
தென்காசி
தூத்துக்குடி
காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்:
திருவள்ளூர் (தனி)
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
திருநெல்வேலி
கிருஷ்ணகிரி
கரூர்
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி
திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்கப்படாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள்:
மக்கள் நீதி மய்யம் (1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது)
மனிதநேய மக்கள் கட்சி
ஆதித்தமிழர் பேரவை
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி
சமத்துவ மக்கள் கழகம்
மனிதநேய ஜனநாயகக் கட்சி
மக்கள் விடுதலை கட்சி
தமிழ் புலிகள் கட்சி
கூட்டணியில் சீட் ஒதுக்கப்படாத சூழலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இக்கட்சிகளின் தலைவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு திமுக தரப்பில் இருந்து நன்றி தெரிவித்து, சீட் கொடுக்க இயலாமை குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.