பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.
2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் மாற்றம் என களை கட்ட தொடங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட பாமக திடீரென இன்று காலை பாஜக கூட்டணியில் இணைந்தது.
இந்நிலையில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று உத்தேச பட்டியல் ஒன்றும் வெளியாகி உள்ளது. பாமக போட்டியிட உள்ளதாக கூறப்படும் 10 தொகுதிகள் பட்டியல். ஆனால் இந்த பட்டியலை பாமக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
1.தர்மபுரி
2 கடலூர்
3.விழுப்புரம் (தனி)
4.சிதம்பரம் (தனி)
5.ஆரணி
6.அரக்கோணம்
7.ஸ்ரீபெரும்புத்தூர்
8 சேலம்
9. மத்திய சென்னை
10.தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி
தருமபுரி தொகுதியில் மருத்துவர் செந்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம் தொகுதியில் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விழுப்புரம் தனி தொகுதியில் வடிவேல் ராவணன், கடலூரில் வழக்கறிஞர் பாலு, சிதம்பரத்தில் சங்கர் உள்ளிட்டோர் பாமக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள் தான் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால் போட்டியிடும் தொகுதிகளோ அல்லது வேட்பாளர்கள் குறித்தோ அதிகாரப்பூர்வமாக பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.