• vilasalnews@gmail.com

காங்கிரஸ் வசம் சென்ற திருநெல்வேலி - திமுக ஒதுங்கியதன் பின்னணி என்ன?

  • Share on

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

ஆனால், தற்போது அந்த கட்சிக்கு ஆரணி, திருச்சி, ஆரணி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லையை கொடுத்து இருக்கிறது திமுக. இதில் நெல்லை சபாநாயகர் அப்பாவு மகன் திமுக சார்பில் போட்டியிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் பக்கம் சென்றுள்ளது. இதற்கான காரணம்தான் என்ன?

திருநெல்வேலி தற்போது திமுக வசம்தான் இருக்கிறது. அங்கு எம்.பி யாக ஞானதிரவியம் இருக்கிறார். இவரின் ஆதரவாளர்களுக்கும் திருமண்டல திருச்சபை பேராயர் பர்னபாஸ் தரப்புக்கும் இடையே கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இந்த சூழலில் திருச்சபையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. அந்த ஆசிரியருக்கு ஆதரவாக பேராயர் பர்னபாஸ் செயல்படுவதாக கூறி ஞானதிரவியம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து பள்ளி தாளாளர் உட்பட திருச்சபையின் அனைத்து நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியத்தை பேராயர் நீக்கினார். இதற்கு எதிர்ப்புதெரிவித்து, பாளையங்கோட்டையில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பேராயர் ஆதரவாளர்களுடன் ஞானதிரவியம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது பேராயரின் ஆதரவாளர் காட்பிரே நோபிள் மீது ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தினர்.

அதேபோல், கடந்த சில மாதங்களாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கும், ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் உச்சமாக மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பிறகு அது தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் திமுக அங்கு களம் கண்டால் உட்கட்சி பூசலால் யாரும் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என தலைமை முடிவு செய்தது. இதையடுத்துதான் அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து அங்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவ ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தனது மகன் அசோக்குக்கு சீட் கேட்டு வருகிறார். தேர்தல் செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார், இதேபோல் திருச்சி தொகுதியை இழந்தாலும் திருநாவுக்கரசரும் தனக்கு திருநெல்வேலி வேண்டும் என கேட்டு வருகிறாராம்.

  • Share on

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இதுதான்... வெளியானது அதிகாரபூர்வ பட்டியல்!

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்... நாளை வெளியாக வாய்ப்பு!

  • Share on