• vilasalnews@gmail.com

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இதுதான்... வெளியானது அதிகாரபூர்வ பட்டியல்!

  • Share on

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இருப்பினும், அந்த தொகுதிகள் எவை என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கு மட்டும் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் மதிமுக, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வெளியாகமல் இருந்தது. தற்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வெளியாகி உள்ளது. அதன் படி, 

திருள்ளூர் ( தனி ), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப்படுகிறது.

  • Share on

ஆளுநர் பதவி ராஜினாமா... மக்களவைத் தேர்தலில் களம் இறங்குகிறாரா தமிழிசை?

காங்கிரஸ் வசம் சென்ற திருநெல்வேலி - திமுக ஒதுங்கியதன் பின்னணி என்ன?

  • Share on