• vilasalnews@gmail.com

நல்லாங்குளம் கிராமத்தில் முத்து சிலம்ப கூடத்தின் சார்பில் அரங்கேற்ற நிகழ்ச்சி!

  • Share on

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே  நல்லாங்குளம் கிராமத்தில் முத்து சிலம்பக் கூடத்தின் சார்பில்  சிலம்ப  அரங்கேற்ற நிகழ்ச்சி ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்நாதன் கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நல்லாங்குளம் கிராமத்தில் முத்து சிலம்ப கூடத்தின் சார்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சிலம்பு பயிற்சி, வாள்வீச்சு, சுருள் வாள் வீச்சு, தீபந்தாட்டம், போர் பயிற்சிகள் ஆகிய வகுப்புகள் நடைபெற்றது, 

பயிற்சியில் நல்லாங்குளம், கோரைக்குளம், செட்டிகுளம், வண்ணாத்தியேந்தல்  ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், குழந்தைகள் ஆர்வத்துடன் கடந்த ஒரு ஆண்டுகளாக சிலம்பு பயிற்சியை முறையாக கற்றுக் கற்றுக்கொண்டார்கள். 

இதன் தொடர்ச்சியாக சிலம்பு அரங்கேற்ற நிகழ்ச்சி நல்லாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்நாதன் கணேசன் அவர்கள் தலைமையில், முத்து சிலம்ப கூட ஆசான் முனியசாமி,பரளச்சி காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிலம்பு ஆசிரியர் முனிஸ்வரி அனைவரையும் வரவேற்றார்  சிலம்பு பயிற்சி எடுத்த அனைவரும் அரங்கேற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய  ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்நாதன், "சிலம்பாட்டம் கலையானது   5000 ஆண்டுகள் பழமையான கலையாகவும், கிமு இரண்டாயிரத்துக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் ஆயக்கலை 64 கலைகளில்  சிலம்பக்கலை சிறந்து  விளங்குகிறது என அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். கிபி 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் சிலம்பம் ஆடுவதில் வாதம், பித்தம், கபம், நீங்குவதாகும் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார். சிலம்ப கலையை நம்முடைய  பாட்டன், தாத்தா ஆகியோர் கற்ற  கலையை தற்காப்பு கலையாகவும், போர் பயிற்சி கலையாகவும் கற்று வந்தார்கள், கால போக்கில் இந்த கலை அழிவில் விளிம்பிலிருந்து மீண்டும் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களும் சிலம்ப கலையை ஆர்வத்துடன் தற்போது கற்று வருகின்றார்கள். நமது  பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலம்பக் கலையை கடந்த ஒரு வருடமாக முறையாக பயிற்சி எடுத்தார்கள் அனைவருக்கும் அதன் தொடர்ச்சியாக அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.  வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சிலம்பு   தற்காப்பு கலை கட்டாய பாடத்திட்டமாகவும் கொண்டு வந்திருப்பது வரவேற்க தகுந்தது மத்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என கூறினார்". 

சிறப்பு விருந்தினராக கணக்கி புற்றுகோயில் ஹரிகிருஷ்ணன் சுவாமிகள், ஜெயகார்த்திக், தேவர் மீடியா அறக்கட்டளையின் நிறுவனர் ஆலடிப்பட்டி மகேஸ்வரன், ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் குண்டுகுளம் வெள்ளைப்பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு சிலம்ப கலையை கற்று அரங்கேற்றம் இளைஞர்கள், மாணவ, மாணவியர்களுக்கு  பரிவட்டம் கட்டி, பாராட்டு சான்றிதழ், நினைவுபரிசு, வழங்கப்பட்டது. முடிவில் சிலம்ப ஆசிரியர் கோவிந்தன்  கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையை மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு - 28 ஆண்டுகளாக மதிமுக போராடியதற்கு கிடைத்த வெற்றி - வைகோ

தமிழகத்துக்கு ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல்.. ஒரே கட்டமாக நடைபெறுகிறது!

  • Share on