• vilasalnews@gmail.com

ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

  • Share on

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 27.01.2021 (புதன்கிழமை) திறந்து வைத்தார்.

சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்திருந்தது. 


இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமான பணியை 2018ம் ஆண்டு மே 8ந் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னிர்செல்வமும் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் தற்போது நினைவிடம் முடிவடைந்தது பொதுமக்கள் பார்வைக்காக இன்று 27.01.2021 (புதன்கிழமை) காலை 11:30 மணி அளவில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50ஆயிரத்து 422 அடி சதுர பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் உயரம்15மீட்டர் 30.5 மீட்டர் நீளமும் 43 மீட்டர் அகலமும் கொண்ட பீனிக்ஸ் பறவை போல் காட்சி அளிக்க கூடிய வடிவத்தில் கட்டப்படுள்ளது.

நினைவிட வளாகத்தில் கருங்கல்லால் அனா நடைபாதை 1.20 லட்சம் சதுர பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு,அவர் செய்த சாதனை,மக்களுக்கு செய்த சேவைகள், ஜெயலலிதாவின் ஊக்க உரை,சிறுகதைகள், பல படங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பொதுப்பணித்துறை 5ஆண்டுகள் பராமரிக்க 9 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.


திறப்பு விழாவில் சட்டப்பேரவை தலைவர், சட்டபேரவை துணை தலைவர்,அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் என திரலானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பெங்களூரு மருத்துவமனையில் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீர் அதிகரிப்பு

  • Share on