• vilasalnews@gmail.com

அதிர்ந்த காங்கிரஸ்... பாஜகவில் இணைந்தார் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி!

  • Share on

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விஜயதாரணி இன்று பாஜக வில் இணைந்துள்ளார்.

கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜகவில் இணையப்போவதாகவும், கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து பாஜக வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் பா.ஜ.கவில் இணைந்தார் விஜயதாரணி.

  • Share on

சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து!

திராவிட மாடல் போட்ட விதைக்கு அடிக்கல் நாட்டும் பாஜக - குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பின்னணி வரலாறு!

  • Share on