• vilasalnews@gmail.com

சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து!

  • Share on

சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, கார் விபத்தில் சிக்கியதும் பதற்றத்துடன் காரை விட்டு இறங்கிய மேயர் பிரியா, காரின் பின்பக்கம் வந்து சேதம் அடைந்து இருப்பதை பார்த்தார்.

சென்னை நோக்கி தனது இன்னோவா காரில் நேற்று இரவு மேயர் பிரியா வந்து கொண்டிருந்த போது, பூந்தமல்லி சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து மேயர் பிரியாவின் கார் இறங்கி கொண்டு இருந்துள்ளது.

அப்போது, மேயர் பிரியாவின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பிரேக் போட, அதன் பின்னால் வந்த மேயர் பிரியாவின் கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. அதே வேளையில் மேயர் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் மேயர் கார் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கு இடையே மேயர் பிரியாவின் கார் சிக்கியது.

இதனால், காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதி சேதம் அடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி மேயர் பிரியா தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். 


இந்தநிலையில், கார் விபத்தில் சிக்கியதும் பதற்றத்துடன் காரை விட்டு இறங்கிய மேயர் பிரியா, காரின் பின்பக்கம் வந்து சேதம் அடைந்து இருப்பதை சற்று பதைபதைப்புடன் பார்த்தார். தொடர்ந்து மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்த நிலையில், மேயர் பிரியா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேயர் பிரியா சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share on

சீமான் அதிர்ச்சி... நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்!

அதிர்ந்த காங்கிரஸ்... பாஜகவில் இணைந்தார் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி!

  • Share on