• vilasalnews@gmail.com

இப்பலாம் போலீஸ் பாதுகாப்பு கேட்பது ஃபேஷனா போச்சு! திருச்சி சூர்யா மனுவிற்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

  • Share on

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா மனுவை தள்ளுபடி செய்துள்ள ஐகோர்ட் கிளை, போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது இப்போதெல்லாம் ஃபேஷனாக மாறிவிட்டது என ஐகோர்ட் கிளை நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, அரசு தரப்பில், திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது ஃபேஷனாக மாறிவிட்டது" என கருத்து தெரிவித்து, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  • Share on

சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக மனோகரன் பொறுப்பேற்பு!

தரையோ... தண்ணீரோ... எங்குமே போகக்கூடாது - சென்னையில் திணறும் பாஜக

  • Share on