![](https://www.vilasalnews.com/img/post/thumbimage/2024/02/12/1707758425.jpg)
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாக்கா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், 6 மாதத்துக்கும் மேலாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.
இந்த நிலையில் தான், தற்போது இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.