முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் பயணித்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது, சட்லஜ் ஆற்றங்கரையோரம் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி பயணித்த கார், திடீரென நிலைதடுமாறி, ஆற்றில் விழுந்ததாகவும் இதில், கார் ஓட்டுநர் பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரில் பயணித்த மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெற்றி துரைசாமியை தேடி வருவதாக இமாச்சல பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.