விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், விஜய் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே உலாவந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, நிவாரண உதவிகள் என விஜய்யின் நகர்வுகளும் அதை நோக்கியே இருப்பதாக கூறப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வந்த நிலையில்,
அவர் இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.