10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விவரங்களைப் பெறலாம் என்றும், பொதுத்தேர்வுக்கான கட்டணத்தையும் வசூலிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை அழைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்போர், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிற ஒரு நாளில் அவகாசம் வழங்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.