திருப்பூரில் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மர்மக்கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது மறைந்திருந்த மர்மக்கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேசபிரபுவை, காமநாயக்கன்பாளையம் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து,மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தனது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சம்பவ நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு போலீஸில் புகார் அளித்துள்ளாராம். மேலும், இதுகுறித்து நேசபிரபு, போலீஸார் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், தன்னை சிலர் நோட்டமிடுவதாகவும், தான் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைப் பற்றி அந்த மர்மநபர்கள் விசாரித்ததாகவும் அந்த ஆடியோவில் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த நபர்கள் தன்னை சுற்றி வளைத்து விட்டதாகவும், தனது வாழ்க்கையே முடிந்து விட்டதாகவும் நேசபிரபு கூறி கதறிய நிகழ்வு, ஆடியோவை கேட்போரையே பதை பதைக்க வைக்கிறது.
இந்த சம்பவம் நடப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்தியாளர்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
சம்பவம் நடப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நேசபிரபு போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கும்.
போலீஸாருக்கு புகார் அளித்த பிறகும் தாக்குதல் நடத்தப்பட்டது கவலைக்குரியது. இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை போலீஸார் விரைந்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.
செய்தியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். செய்தியாளர்கள் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகாமல் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய வேண்டும். என பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை விரைந்து கண்டறிந்து, குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். செய்தியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.