• vilasalnews@gmail.com

பல்லடத்தில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு : உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

  • Share on

தமிழ்நாட்டில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மீது அரிவாள் வெட்டு நடந்துள்ளது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பிய நேசப் பிரபு, வழக்கம் போல இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நேசப் பிரபுவுக்கு தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் என்ன காரணம் என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும், நேசப் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடத்தில் குடித்து விட்டு நடுரோட்டில் போலீசாரிடம் தகராறு செய்தவர்களைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார். இந்த செய்தியால் அதிருப்தி அடைந்த அந்த நபர் அல்லது அவரது ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செய்தியாளர்கள் சமூகத்தின் கண்கள். ஜனநாயகத்தின் தூண்கள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை மிகவும் கண்டிக்கதக்கது. காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Share on

தொப்பூர் கணவாய் பகுதியில் கோர விபத்து.. 5 வாகனங்கள் மோதல் - 4 பேர் பலி!

திருப்பூரில் செய்தியாளர் மீதான கொலை முயற்சி தாக்குதலுக்கு யார் காரணம்? கடைசி நேர பதை பதைக்க வைக்கும் செய்தியாளர் குரல்

  • Share on