தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லறை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது.
இதற்காக 7 நிறுவனங்களிடம் இருந்து பீர், 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒயினையும் கொள்முதல் செய்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என மதுபான ஆலை உரிமையாளர்கள் டாஸ்மாக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை அடுத்து சாதாரண மது வகைகளுக்கு குவாட்டருக்கு பாட்டிலுக்கு 110 ரூபாயும், நடுத்தர, உயர்தர குவாட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாயும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.