• vilasalnews@gmail.com

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு செல்ல பேருந்து வசதிகள்... இதோ விபரம்

  • Share on

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட்., திண்டுக்கல் மண்டலம் சார்பில், பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, 22.01.2024 முதல் 28.01.2024 வரை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோயம்புத்துார், திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்து பழனிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் தேவைக்கேற்ப அதிக பேருந்துகளும் இயக்கப்படும்.

முன்பதிவு:

பொதுமக்கள் மற்றும் பயணிகள், சிரமமின்றி பயணம் செய்ய, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) www.tnstc.in Website, Mob App மற்றும் இணைய சேவை வழியாக முன்பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக:

பழனி செல்லும் பக்தர்களின் சுகமான பயணத்திற்கும் உடனடி தொடர்புக்கும், திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தேனி, கரூர், நத்தம் ஆகிய பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு உதவிடவும் வழிகாட்டவும் அலுவலர்கள்/பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Share on

தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு ரூ.1000... லட்ச கணக்கில் மக்கள் வாங்கவில்லை; பல கோடிகள் அரசு வங்கி கணக்கில் திரும்ப வந்துவிட்டது!

டாஸ்மாக் கடைகளில் உயரும் குவாட்டர் விலை? எவ்வளவு உயர்கிறது?

  • Share on